×

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46.63 கோடியை தாண்டியது!!

ஜெனீவா : உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44.63 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 8 லட்சத்து 30 ஆயிரத்து 892 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37 கோடியே 94 லட்சத்து 93 ஆயிரத்து 955 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 60 லட்சத்து 19 ஆயிரத்து 181 பேர் உயிரிழந்துள்ளனர்.   நாடுகள்            பாதிப்பு                பலி              குணமடைந்தோர் 1 அமெரிக்கா     80,917,522         984,020         54,753,181         2 இந்தியா             42,967,077         515,133         42,388,475         3 பிரேசில்             29,049,013         652,207         27,058,371         4 பிரான்ஸ்            23,057,326         139,275         21,596,027         5  இங்கிலாந்து       19,119,181         162,008         17,537,214         …

The post உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46.63 கோடியை தாண்டியது!! appeared first on Dinakaran.

Tags : Geneva ,Wuhan, China ,
× RELATED தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக...